நயன்தாரா, விஜய் சேதுபதி இருவருக்குமே தமிழ் சினிமாவில் இருவருக்குமே மாஸான வரவேற்பு இருக்கிறது. இருவரும் இணைந்து நானும் ரௌடி தான் படத்தில் நடித்திருந்தார்கள்.
தெலுங்கில் ரூ 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க அவரின் மகன் ராம் சரண் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் தியேட்டர் உரிமை தெலுங்கில் ரூ 140 கோடிக்கும், அனைத்து மொழிக்கான சேட்டிலைட் ரைட்ஸ் ரூ 125 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது.
படம் ரிலீஸ் ஆகும் வேளையில் சயீரா நரசிம்ம ரெட்டியின் குடும்பத்தினர் ராம்சரண் சொன்னபடி ரூ 50 கோடி தரவில்லை என கூறி படத்தை எதிர்த்து வழக்கு தொடரும் முயற்சியில் இருக்கிறார்கள்.
இதனால் படத்தை திட்டமிட்ட நாளில் வெளியிட சுமூக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.