தெற்கு அதிவேக வீதியில் விபத்து..!!!

தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொட – கெலனிகமவுக்கு இடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

ஜுப் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக தெற்கு அதிவேக வீதியில் பயணிப்பவர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

குறிப்பாக வாகனங்களின் முன்பக்க விளக்குகளை ஒளிர விட்டவாறு பயணிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.