கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் ஒரு குறும்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதில், சாண்டிக்கு வெற்றிபெற வாழ்த்து கூறுகின்றார்.
இது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அவர் இயற்றிய பாடல் தற்போது கவின் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் ஓடிக்கொண்டு இருக்கிறது.
#Kavin #sandy @sandyarmy_offl#Kavinarmy#BiggBossTamil3 #BiggBossTamil pic.twitter.com/VPWO51Jowa
— SATZ Sathiesh (@SataSathiesh) September 26, 2019
இரண்டாவது சீசனை விட மூன்றாவது சீசன் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. அதேபோல் மக்கள் மத்தியிலும் இந்த சீசன் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த சீசனில் கலந்து கொண்ட எல்லோருமே ஒரு வகையில் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்கள் என்றுதான் கூற வேண்டும். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் ஒருவராவது கெட்ட பெயர் எடுக்காமல் இருப்பார்.
ஆனால் இந்த முறையை எல்லோருமே விமர்சனத்திற்கு ஆளாகிவிட்டனர். அதில் கவின் முக்கிய போட்டியாளர் என்றே கூறவேண்டும்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் 5 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.