தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை அமலாபால். இவர் மைனா திரைப்படத்தில் இருந்து தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இதுமட்டுமல்லாது தமிழ் திரையுலக ரசிகர்களிடையே காதல் கொண்டாட்டத்துடன் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டவர். தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது மலையாள திரையுலகிலும் நடித்து கொண்டு இருந்த நிலையில்., இறுதியாக ஆடை திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்., இவரின் தைரியத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். திரைப்படத்தில் நடித்து கொண்டு வரும்போதே இவருக்கு திருமணமும் முடிந்தது.
பிரபல இயக்குனரான விஜய்யுடன் திருமணம் செய்து இருந்த நிலையில்., திருமண வாழ்க்கையானது திடீர் திருப்பமாக விவகாரத்தில் நிறைவு பெற்றது. விவகாரத்திற்கு பின்னர் சில மாதங்கள் செய்வதறியாது திகைத்து வந்த நிலையில்., பின்னர் ஆடை திரைப்படமானது கிடைத்தது. இந்த திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமலாபாலுக்கு அமைந்தது.
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடந்து., பல இயக்குனர்களும் இவரிடம் கதைகள் சொல்ல ஆர்வமாக இருக்கும் நிலையில்., இதனை ஏற்றுக்கொள்ளாத அமலாபால்., அமைதியான வாழ்க்கை மற்றும் பயணத்திற்கு திரும்பியுள்ளார். மேலும்., பாண்டிச்சேரியில் இருக்கும் ஆசிரமம் தனக்கு அமைதியை தந்ததாகவும்., தான் வாழ்க்கையில் இப்போது தான் அமைதியை உணர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும்., ஆடம்பரமான வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை என்றும்., இயற்கையை சார்ந்த வாழ்க்கையே தனக்கு பிடித்துள்ளது என்பதால்., இயற்கையோடு ஒன்றி வாழ விருப்பம் இருப்பதால்., காடுகளில் குழுவாக சிறிது காலம் வாழ்க்கையை நகர்த்த ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.