புதினா ஆம்லெட் ரெசிபி..!

தேவைப்படும் பொருட்கள் :

முட்டை –  5
புதினா – தேவையான அளவு
மஞ்சள் தூள் –  1 சிட்டிகை
கரம் மசாலா –  2  ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்யும் முறை:

புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை  ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளைத் தூவி, ஆம்லெட்டை சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான புதினா ஆம்லெட் ரெடி!!!