நடிகர் அருண் விஜய்க்கு ஏற்பட்ட சோகம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அருண் விஜய்.  இவர் தனது வித்தியாசமான நடிப்பிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நீண்ட நாட்கள் பிறகு அருண் விஜயின் வித்தியாசமான நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து குற்றம் 23, தடம் போன்ற படங்கள் இவர்க்கு வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் அருண் விஜய் வாகா பட இயக்குனர் குமார வேலன் இயக்கத்தில் புதிய நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்த பாலக் லாவாணி நடிக்கிறார்.

இந்த படத்திற்கான பட பிடிப்பு நடைபெற்று கொண்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் அருண் விஜய் எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவு செய்தவை, வேலையில் எனக்கு காயம் ஏற்படும்போது நான் ஒருபோதும் வலியை உணரவில்லை, ஏனென்றால் இதுதான் நான் விரும்பும் பயணம் மற்றும் உயர்ந்து தங்குவதைத் தேர்ந்தெடுத்தது. ஒவ்வொரு தழும்புகளும் ஒரு கதை சொல்லும் என்று  பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில்  அருண் விஜய் காயத்திற்கு சோகமாக ஸ்டண்ட் சில்வா மருந்து போடுவது போல் உள்ளது.