உறக்கம் வரவில்லையா ?

இன்றுள்ள காலகட்டத்தில் பல நபர்கள் தொடர் பணிகள் காரணமாகவும், உணவுப்பழக்கத்தின் காரணமாகவும் தூக்கமின்மைக்கு உள்ளாகி, நமது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்க செய்கின்றனர்.

இந்த பிரச்சனையில் இருந்து நாம் தப்பிக்க தினமும் தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டு இருந்தோம் என்றால் இந்த பதிவு கட்டாயமாக உங்களுக்குத்தான். ஏனெனில் தொடர்ந்து தூக்கம் வரவில்லை என்று கூறி, தூக்க மாத்திரைகளை எடுத்து கொண்டு இருந்தால் நம்முடைய உடலானது பல விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகிறது.

தூக்க மாத்திரைகளை நாம் எடுத்து தூங்கும் பாக்கத்தை வைத்திருந்தோம் என்றால், பகல் வேலைகளிலும் தூக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக மனதானது குழப்பம் அடைந்து, பணிகளின் போது கவனக்குறைவானது ஏற்படலாம். தூக்க மாத்திரைகள் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்துவதன் மூலமாக இன்சோமோனியா பிரச்சனை குறைகிறது.

இதன் விளைவாக நமக்கு தலைவலி மற்றும் முதுகுவலியானது ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது தூங்கும் சமயத்தில் சுவாசப்பாதையில் ஒரு விதமான தடையை ஏற்படுத்தி மூச்சுத்திணறல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. நீண்ட காலத்திற்கு தொடர்ந்து தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டோம் என்றால் புற்றுநோய் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படலாம்.

ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளானது கோமா மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. உடலில் இருக்கும் ஆக்சிஜனின் அளவானது குறைந்து நிம்மதியற்ற உறக்கம் மட்டுமே நமக்கு கிடைக்கும்.

வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரையை சேர்ந்து நாம் உபயோகித்தால் வாந்தி, குமட்டல் மற்றும் திடீர் பதற்றத்துடன் வியர்வை வெளியேறும். இந்த அறிகுறி இருப்பின் தூக்க மாத்திரையை கைவிடுவது நல்லது. மருத்துவரின் எந்த விதமான ஆலோசனையும் இல்லாமல் எந்த மருந்துகளை உட்கொள்வது உடலுக்கு நல்லதல்ல.