ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் முன்னேரே, வெளியான அதிர்ச்சி செய்தி!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது தொடக்க ஆட்டக்காரர்களாக யாரை களமிறக்குவது என்பது தான். முரளி விஜய், தவான் ஜோடி அடுத்தடுத்து சொதப்ப, அதற்கு அடுத்து அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறக்கப்பட்ட ப்ரித்வி ஷா சிறப்பாக விளையாடிய போதிலும் தற்போது ஊக்கமருந்து பிரச்சினையில் தடை பெற்றுள்ளார். அதற்கடுத்தபடியாக மயங்க் அகர்வால் ஹனுமா விஹரி ஆகியோரை பரிசோதனை செய்து பார்க்க, விஹாரி மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடுவதால் அவர் மிடில் ஆர்டருக்கு சென்றுவிட்டார்

மயங்க் அகர்வால் ஒரு தொடக்க ஆட்டக்காரராக இருக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் தொடர்ச்சியாக சொதப்ப தற்போது நீக்கப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக மிடில் ஆர்டரில்  இதுவரை டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த ரோகித் சர்மா முதல்முறையாக டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் 20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மாற்று தொடக்க ஆட்டக்காரராக தற்போது அணியில் ஷுப்மன் கில் என்கின்ற 20 வயதே ஆன இளம் வீரர் போட்டிக்கு வந்து நிற்கிறார். அதேபோல ப்ரித்வி ஷா நவம்பர் மாதத்தில் தடை முடிந்து மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அபிமன்யூ  ஈஸ்வரன், பிரியன்க் பஞ்சால் போன்ற இளம் வீரர்கள் வரிசை கட்டி நிற்பதால் ரோஹித் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.

இருப்பினும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆனால் இளம் வீரர்களின் நெருக்கடியால் ரோஹித் சர்மாவுக்கு தென் ஆப்பிரிக்கா தொடரில் நிச்சயமாக சாதித்தே ஆக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால் அவருக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் 6 இன்னிங்ஸ்கள் வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிகிறது. அதற்குள் தன்னை நிரூபித்து இடத்தை தக்கவைப்பாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.