தேவையான பொருட்கள் :
எண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
பன்னீர் – ஒரு கப்
கேரட் – 1
பீன்ஸ் – 7
வெங்காயத்தாள் வெள்ளைப் பகுதி – கால் கப்
வெங்காயத்தாள் பச்சைப் பகுதி – அரை கப்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 2 பல்
உப்பு, மிளகு – தேவையான அளவு.
செய்முறை :
ப.மிளகாய், கேரட், பூண்டு, பீன்ஸ், வெங்காயத்தாளை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். சூடான நீரில் பன்னீரைப் போட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
பாஸ்மதி அரிசியைக் கழுவி உதிரி போல் வேக வைத்து எடுத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் பச்சைமிளகாய், பூண்டு, சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் கேரட், பீன்ஸ், வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதி, மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் நன்கு கிளறி வேக வையுங்கள். துண்டாக நறுக்கிய பன்னீரை இத்துடன் சேர்த்து காய்கறிகளோடு பன்னீர் சேரும் வரை வதக்குங்கள்.
பின்னர் வேக வைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள். இல்லையெனில் அரிசி உடைந்துவிடும். இறுதியாக மிளகுத்தூள், உப்பு, வெங்காயத்தாள் பச்சைப் பகுதியைச் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து சூடான கிரேவியோடு பரிமாறுங்கள்.
சூப்பரான பன்னீர் பிரைடு ரைஸ் ரெடி.!