நடிகர் விஜய்யின் அடுத்த படத்தினை மாநகரம் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அதற்கான முதற்கட்ட பணிகளும் தற்போது நடந்துவருகிறது. விஜய் தற்போது வெளிநாட்டில் இருக்கும் நிலையில் ஷூட்டிங் அவர் சென்னை திரும்பியபிறகு துவங்கும் என தெரிகிறது.
தளபதி64 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த அவர் தற்போது விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார்.
இந்த படத்திற்காக அவர் 10 கோடி சம்பளம் பெறுகிறார். அதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகிவிட்டது என்று கூறப்படுகிறது.