பளபளப்பான, மென்மையான மற்றும் பருக்கள் அற்ற சருமம் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் எப்படியாவது முகத்தில் ஏதேனும் பரு அல்லது சரும பிரச்சனை வந்து சருமத்தில் சேதத்தினை ஏற்படுத்திவிடுகிறது என்ற கவலை பலருக்கும் உள்ளது.
சருமத்தை ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்றவாறு பாதுகாக்க வேண்டித்துள்ளதால், சந்தைகளில் விற்கப்படும் பல விலையுயர்ந்த பொருட்கள் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நம் அனைவரும் நமது கிட்சனில் இருக்கும் பொருட்களைப் பற்றி மறந்து விடுகிறோம். எனவே நீங்கள் ஒளிரும் சருமத்தைப் பெறுவதற்காக பேஷன் நிருபர் ஒரு சில அழகுக் குறிப்புகளை வழங்கியுள்ளார். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
அரிசி மாவு உங்கள் சருமத்தைப் பாதுகாக்க நீங்கள் பயன்படுத்த வேண்டியது அரிசி மாவு தான். அரிசி மாவு உங்கள் சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் கொடுக்கவும் முகத்தினை ஸ்க்ரப் செய்வதற்கும் உதவுகிறது. அரிசி மாவு உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யக் கூடிய தேவையான மூலப்பொருட்களைக் கொண்டுள்ளன. நீங்கள் சந்தைகளில் விற்கப்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒருமுறையாவது அரிசி மாவினை உங்கள் முகத்தில் அப்ளை செய்து பாருங்கள் பின்பு எந்தவிதமான விலையுயர்ந்த பொருட்களையும் விலை கொடுத்து வாங்கமாட்டீர்கள் என்கின்றனர். அரிசி மாவு முகத்தினை இளமையாக வைக்க உதவும் என்று ஜப்பானியர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.
பயன்படுத்தும் முறை அரிசி மாவினை தண்ணீருடன் கலந்து உங்கள் முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து அரிசி மாவு காய்வதற்கு முன்பு கழுவுவதால் எப்போதும் இளமையான சருமத்தைப் பெறலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இளமையான சருமம் அரிசி மாவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளதால் சருமத்தைச் சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி முகத்தினை புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் வைத்து இருக்க உதவுகிறது. அத்துடன் அரிசி மாவு உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கவும் மற்றும் மென்மையானதாகவும் மாற்றுகிறது. அரிசி மாவினை சருமத்தில் மாஸ்க்காகப் போடும்போது சருமத்தினை எஸ்ப்ளாய்டு செய்து ஒளிரும் மற்றும் பளபளக்கும் சருமத்தினை உங்களுக்குத் தருகிறது.
பயன்கள் அரிசி மாவு மாஸ்க் உங்கள் சருமத்தை வெயிலின் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. சருமத்தினை ஈரப்பதத்துடன் வைக்கிறது. உங்கள் சருமத்தினை பளபளக்கச் செய்ய உதவுகிறது.
சருமத்தினை எக்ஸ்ப்ளாய்டு செய்து இறந்த செல்களை அகற்றுகிறது. குறைந்த வயதில் ஏற்படும் வயதான தோற்றம் வராமல் தடுக்கிறது. எனவே அரிசிமாவு மாஸ்க்கை உபயோகித்துப் பொலிவான மற்றும் ஒளிரும் சருமத்தினை பெற்றிடுங்கள்.