பிக்பாஸ் சீசன் 3ல் யாரும் எதிர்பாராத விதமாக வெளியேறினார் கவின், இதற்காக அவர் விளக்கத்தை கொடுத்தாலும் சாண்டி மற்றும் லொஸ்லியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
குறிப்பாக லொஸ்லியாவை சமாதானப்படுத்த முயன்றும், அவர் கண்ணீர் விட்டு கதறினார்.
அப்போது லொஸ்லியாவை பார்த்து, “இதை பார், எல்லாம் ஞாபகம் வரும்” என புகைப்படம் ஒன்றை கொடுத்தார்.
அது, லொஸ்லியாவுக்காக அவரது தந்தை அனுப்பிய பரிசாகும், இதற்கு பதிலளித்த லொஸ்லியா ”நானும் அவர்களுக்காக மட்டுமே இருக்கிறேன், இல்லையென்றால் என்றோ சென்றிருப்பேன்” என பதிலளித்தார்.
அந்த புகைப்படத்தின் பின் இருந்த சில வரிகளாலும் கவின் மிகவும் மனமுடைந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.