பிக்பாஸில் கவின் வெளியேற்றம் குறித்து மறைமுகமாக அபிராமி டுவிட் செய்ததாக நெட்டிசன்கள் கொந்தளித்த நிலையில் அந்த பதிவையே நீக்கியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸில் இருந்து எவிக்டான அபிராமி, தன் பணிகளில் பிஸியாகிவிட்டார், இதற்கு முன்பாக மற்ற போட்டியாளர்களின் வீட்டிற்கு சென்று குடும்ப நண்பர்களை சந்தித்து வந்தார்.
இந்த புகைப்படங்களை பதிவிட்டு வந்த அபிராமி, தற்போது அழகான பாவாடை அணிந்து பதிவிட்டு வ்நதார்.
அதில் “கண்கள் நிலம் நோக்கி உன் வருகைக்காக என் காத்திருப்பு” என எழுதியிருந்தார், இதை பார்த்த நெட்டிசன்கள் கவின் வருவது குறித்து மறைமுகமாக கூறுகிறார் என கொந்தளிக்க, அந்த பதிவையே நீக்கிவிட்டார்.
அத்துடன், இது வெறும் வரிகள் மட்டுமே தவிர யாரையும் குறிப்பிட்டு அல்ல எனவும் விளக்கம் அளித்துள்ளாராம்.