அல்சரை நீக்கும் கம்பங்கூழ்!

அல்சருக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஹெச் பைலோரி என்கிற பாக்டீரியா முக்கிய காரணமாக உள்ளது என்கிறது நவீன மருத்துவம். இதற்கு மருந்தாக ஆன்டிபயாட்டிக்கும், புண்கள் ஆற புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர் எனும் மருந்துகளை உட்கொண்டாலும் இந்த பாக்டீரியாக்கள் முற்றிலுமாக அழிவதில்லை. திரும்பவும் வயிற்றெரிச்சல் தொடங்கும் பொழுது டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுவது ஆன்டி பயாட்டிக்குகளே.

பலமுறை ஆன்டி பயாட்டிக்குகள் உபயோகிக்கும்போது அவை பாக்டீரியாக்களுக்கு எதிராக எதிர்ப்பு தன்மையை இழந்து விடுகின்றன. இதனுடன் உபயோகிக்கும் புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்களால் பல பக்கவிளைவுகள் ஏற்பட்டு இதய நோய்கள், சிறுநீரக கோளாறுகள் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்கள் தோன்ற வழிவகுக்கின்றன. இத்துடன் அல்லாமல் நமது உணவுப்பாதையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி உடலில் சத்துக்களை கிரகிக்க முடியாமல் தடை செய்கிறது.

இதற்கு தீர்வாக அமைவது நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்களை கொண்ட புரோபயாடிக் உணவுகளே. புளிக்க வைத்து அடுத்தநாள் சாப்பிடும் கம்பங்கூழில் லாக்டோபேசிலிஸ் மற்றும் வெய்செல்லா ஸ்ட்ரெயின் PL9001 எனும் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. இதில் முக்கியமாக வெய்செல்லா எனப்படும் பாக்டீரியா ஹெச் பைலோரி வளர்வதை தடுத்து செயலிழக்க செய்து முற்றிலுமாக அழிக்கின்றது.