எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை…!!!

கெஞ்சும் நபர்

சில ஆண்கள் எதற்கெடுத்தாலும் கெஞ்சுவார்கள். வெளியே போகலாம் ப்ளீஸ் என் கூட வா, இன்னிக்கி நாம டின்னர் எங்கயாவது போலாம் ப்ளீஸ் என எதற்கெடுத்தாலும் ப்ளீஸ் சேர்த்துக் கொண்டு திரியும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பது இல்லை

நான் தான் சரி

எது செய்தாலும், கூறினாலும் நான் செய்தது தான் சரி, நீ செய்தது தவறு தான் என்று ஒருதலைப்பட்சமாக பேசும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

வெற்றியில் மிதப்பவர்

பெண்களுக்கு வெற்றியாளர்களை பிடிக்கும். ஆனால், எப்போது பார்த்தாலும் அந்த வெற்றியின் மிதப்புலேயே உலா வரும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பது இல்லையாம்.

நான் ரொம்ப பிஸி

பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆண்கள், தங்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புவர்கள். இதற்கு நேர் மாறாக எப்போது பார்த்தாலும் நான் பிஸி என்று காட்டிக் கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

ஆணாதிக்கம்

பெண்களை தரக்குறைவாகவும் பேசும், ஆண்கள் தான் வலிமையனாவர்கள். தங்களால் தான் எதுவும் செய்ய முடியும் என்று நெஞ்சை நிமிர்த்தும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

பொறாமை

பொறாமை குணம் உள்ள ஆண்களை பெண்களுக்கு சுத்தமாக பிடிப்பதில்லையாம்.

சொந்தம் கொண்டாடும் நபர்

தனக்கு மட்டும் தான் உன் மீது உரிமை இருக்கிறது. வேறு யாரும் உன்னுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது என்று கூறும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. சில சமயங்களில் அதிகமான காதல் கூட உறவில் விரிசல் ஏற்பட காரணமாகிவிடுகிறது.

நாடோடி

எதிர்கால திட்டங்கள் இன்றி நாடோடி போல ஊர் சுற்றுவதை விரும்பும் நபர்களை பெண்களுக்கு பிடிப்பதில்லையாம்.

தற்பெருமை

நான் எல்லாம் அப்படி, நாங்க வந்து நின்னா பூமி அதிரும், கடல் கொப்பளிக்கும் என தன்னை பற்றி தானே பெருமையாக பேசிக்கொள்ளும் நபர்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

மன்னிச்சுக்கோங்க!!!

ஏதாவது ஒன்றை முந்திக் கொண்டு செய்துவிட்டு, பிறகு அதற்காக சாரி கேட்டுக் கொண்டு திரியும் முந்திரிக்கொட்டை ஆண்களையும் பெண்களுக்கு பிடிப்பதில்லை.