நுணா பழத்தால் இவ்வளவு மருத்துவ பயன்களா?

சுற்றுச்சூழலின் நண்பனான நுணா காற்றின் வேகத்தைத் தடுத்து, தூசியினை வடிகட்டி சுற்றுச் சூழலுக்கு உதவும் மரம். பூக்கள் மார்ச், ஜுன் மாதங்களில் பூத்து வெள்ளை நிறத்திலிருக்கும். காய்கள் நான்கு முனைகளுடன் உருவாகும்.

வெப்பத்தைத் தனிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், மாந்தம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளைத் தீர்க்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும்,இரும்பு சக்தியை அதிகரிக்கவும், வயிற்று புண்ணை குணமாக்கவும், மூட்டு வலியைப் போக்கவும், புற்று நோயை வராமல் தடுக்கவும் பயன்படுகிறது.

இலைச் சாறு நாள்பட்ட புண்களையும் போக்கும் சக்தி கொண்டது. இலையிலிருந்து ஒரு வித உப்பு தயாரிக்கிறாங்க, இதை மருந்தாகவும் பயன்படுத்துறாங்க. இலைச் சாற்றை மூட்டுகளில் பூசினால் மூட்டு வீக்கம், மூட்டு வலி, மூட்டுவாதம் ஆகியவை குணமாகும், நிலங்களுக்கு நல்ல உரமாகும்.

மரப் பட்டை காய்ச்சல், குன்மம், கழலை முதலியவற்றை குணமாக்கும். தோல் பதனிடவும் பயன்படுகிறது.

காயை முறைப்படி புடம் போட்டுப் பொடித்து பல் துலக்கினால் பல் சொத்தை நீங்கும். காயைப் பிழிந்து சாறு எடுத்து தொண்டையில் பூசினால், தொண்டை கரகரப்பு நீங்கும்.

வேரை கஷாயமிட்டுக் குடித்தால் மலச்சிக்கல் இருக்காது.  வேரிலிருந்து வரும் நீர் இரத்த அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மரம் தண்டு .. மரக்குவளைகள், பொம்மைகள், மரத்தட்டுகள், தறி நெசவிற்கு உதவும் பாபின் போன்றவற்றை செய்யவும், காகிதம் தயாரிக்க மரக்கூழ், மேசை, நாற்காலிகள் செய்யவும் பயன்படுகிறேன்.  உறுதியான அதே சமயம் மிகவும் லேசானது என்பதால், ஏர், வில்வண்டி, பாரவண்டி போன்றவற்றில் மாடுகளைப் பூட்டும் நுகத்தடி செய்யவும் பயன்படுகிறது .