இந்த உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்., அமெரிக்காவில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து மாகாணத்தில் இருக்கும் கெய்தஸ்பர்க் நகரில் செயல்பட்டு வரும் தேவாலயத்தில்., பாதிரியாராக பணியாற்றி வருபவர் ஆக்டொவியா கண்டரிரோ (வயது 42).
இந்த தேவாலயத்திற்கு தினமும் குடும்பத்தினருடன் மக்கள் வந்து செல்வது வழக்கம். இந்த தருணத்தில்., வழக்கமாக வந்து செல்லும் சிறுமியொருவர்., தாய் மற்றும் தந்தை., உறவினர்கள் இன்றி வாழ்ந்து வருவதை பாதிரியார் அறிந்துள்ளான். சிறுமி குறித்த விபரங்களை அறிந்த பாதிரியார்., சிறுமியை இளம் வயதில் தனியாக வசிக்க கூத்து என்று அறிவுரை கூறியுள்ளான்.
மேலும்., தேவாலயத்தின் உள்ளே இருக்கும் தனி அரையில் தங்க வைத்து., சிறுமியை கவனித்து கொண்டு வந்துள்ளான். இந்த தருணத்தில்., சிறுமியை கடந்த ஜனவரி மாதத்தின் போது., தனது அறைக்கு அழைத்து சென்ற கொடூரன் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான். இந்த நேரத்தில்., சிறுமி நல்ல காலமாக தப்பித்துள்ள நிலையில்., அவ்வப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளான்.
சிறுமி இது குறித்து யாரிடமும் கூற வழியில்லாமல் இருந்த நிலயில்., இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளான். இந்த நிலையில்., இவனது தொடர் பாலியல் தொல்லை நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த சிறுமி., கடந்த மே மாதத்தின் போது இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் பாதிரியாரை கைது செய்ய முடிவு செய்தனர்.
இந்த சமயத்தில்., பாதிரியாரே தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில்., சிறுமியின் உடலில் சாத்தான் இருப்பதாகவும்., சாத்தானே என்னை பாலியல் வன்கொடுமை செய்ய சொல்லி தூண்டியதாகவும் தெரிவித்துள்ளான். இந்த விபரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்., இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இருந்தால் புகார் அளிக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.