விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல கேம் ஷோ பிக் பாஸ். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் வாரம் இறுதியில் ஒவ்வொரு போட்டியாளர்களும் வெளியேறி வந்தார்கள்.
இதை தொடர்ந்து நேற்று கவின் ஐந்து லட்சத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் தற்போது 5 போட்டியாளர்களே இருக்கிறார்கள்.
டாப் 5 பைனலிஸ்ட்டாக இருப்பவர்கள் தர்ஷன், முகேன், சாண்டி, லொஸ்லியா, மற்றும் ஷெரின். இந்த நிகழ்ச்சி தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
அக்டோபர் 6-ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியானது நிறைவடைகிறது, இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து புதிய தொடர்கள் மற்றும் புதிய கேம் ஷோ ஒளிபரப்பாக உள்ளது.
பிக் பாஸ் ஒளிபரப்பான அந்த நேரத்தில் ‘காற்றின் மொழி’, ‘தாழம்பூ’ ஆகிய 2 புத்தம் புதிய மெகா தொடர்கள் ஒளிபரப்பாகும். மற்றும் வார இறுதியில் ‘தி வால்’ என்ற பிரம்மாண்ட கேம் ஷோவும் நடத்த இருக்கிறது.