தெலுங்கானா மாநிலம் பஹதிஷரீஃப் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த புகாரில் கணவனை கட்டிப்போட்டு அவருக்கும் முன்பே அவருடைய மனைவியை 4 ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
நாகர்கர்னூலை பூர்வீகமாக கொண்ட தம்பதியினர் அங்கிருந்து சில நாட்களுக்கு முன்பு இடம்பெயர்ந்து ஹைதராபாத் மகேஸ்வரன் அருகே ஒரு பண்ணை வீட்டில் வேலை செய்து வந்துள்ளனர்.
அவர்களின் உரிமையாளரால் துன்புறுத்தப்பட்டதன் காரணமாக, இவர்கள் வேலை செய்யும் இடத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டு வேலையை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.
இருப்பினும் அவர்களை தண்டிக்க நினைத்த உரிமையாளர்கள் ரங்கா ரெட்டி மற்றும் பிரதாப் ரெட்டி ஆகியோர் அந்த தம்பதிகள் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்று கணவரை கட்டி வைத்து அவருடைய முன்னாலேயே மனைவியை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளன.
இதுகுறித்து, அந்த தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் காரணமாக இந்த சம்பவம் நேற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.