ஹெச்.ஐ.வி. தொற்றால் பாதித்த நோயாளிகள், ஆன்டி ரெட்ரோ வைரல் எனும் தெரபி மூலமாக ஹெச்.ஐ.வி நோய்த் தாக்கத்தின் வீரியத்தையும் அது உடல் முழுவதும் பரவும் பரவலையும் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் மருந்து எடுத்துக் கொள்ளுதலை நிறுத்தினால் ஹெச்.ஐ. வைரஸ் மிக வீரியத்துடன் பரவி உடலில் உள்ள பிற நல்ல செல்களையும் பாதிக்கும்.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டார் இந்த ஆய்வு தொடர்பாக எம் பயோ என்ற மருத்துவ இதழில் வெளியானது. இன்க் ஆர்.என்.ஏ. உள்ளிட்ட ஆயிரத்து 100 மூலக்கூறுகளை ஆய்வு செய்தனர். அதில் சில, ஹெச்.ஐ.வி. போன்ற வைரசை உடலில் செயல்படத் தூண்டும் அல்லது அதன் செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் செயல்படுவதாகவும், அந்த குறிப்பிட்ட மூலக்கூறுகளை கண்டறிந்தனர்.
அதில் கில் ஸ்விட்ச், ஹீல் ஆகிய பெயரிடப்பட்ட மூலக்கூறுகளை எடிட் செய்தால், ஆன்டி ரெட்ரோ வைரல் தெரபி சிகிச்சையை நிறுத்தினாலும் வைரஸ் பரவல் தடுக்கப்படுவதாக ஆய்வின் ஆசிரியர் மருத்துவர் தாரிக் ரானா குறிப்பிட்டுள்ளனர்.
இதன் மூலம் எய்ட்ஸ் நோயை முற்றிமாக உடலில் குணப்படுத்த முடியாவிட்டாலும், மேலும் தொடர் சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் நோய்த் தொற்று பரவலைத் தடுக்க முடியும் என தெரிவித்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேலும் விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்தனர்.