திருவண்ணாமலையை சேர்ந்த செலின் என்ற பெண் அடையாறில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனத்தில் லேப் டெக்னீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். அங்கே புதுக்கோட்டையைச் சேர்ந்த அருண் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார்.
6 வருட நட்பு பின்னர் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், பெங்களூர் கிளைக்கு செலினிற்கு டிரான்ஸ்பர் ஆகி உள்ளது. அருண் கல்யாண பேச்சை வம்படியாக ஆரம்பித்துள்ளார். இதன் காரணமாக போன மாதம் பெங்களூரு சென்ற அருண், ஹோட்டலில் ரூம் புக் செய்து செலினை வரவழைத்துள்ளார்.
அவரை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பிறகு அவர் கல்யாணம் குறித்து எந்தவிதமான பேச்சும் எழுப்பவில்லை. எனவே, அவன் தன்னை விட்டு விலகுவதை அறிந்த செலின் பெங்களூரு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதை அருண் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
பின்னர் காவல்துறைக்கு பயந்து தன்னுடைய சொந்தக் காரர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். அதனை முறைப்படி கலசபாக்கம் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். பின்னர் செலின் வழக்கம்போல வேலையை பார்க்க அவரது செலவில் சாப்பிட்டுவிட்டு சுற்றி திறந்துள்ளார் அருண்.
பின்னர் உல்லாசமாக இருந்த வீடியோ ஒன்றை தன்னுடைய நண்பனுக்கு அருண் அனுப்பி இருக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த செலின் அருணுடன் சண்டை போட்டுள்ளார். இதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு அருண் தன்னுடைய சொந்த ஊருக்கு கிளம்பி இருக்கின்றார். இதுகுறித்து அருண் குடும்பத்தார் எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை,
இதனால் அதிர்ச்சி அடைந்த செலின் மீண்டும் காவல்துறையை நாடினார். இப்பொழுது அருண் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. காவல்துறைக்கு பயந்து தாலி கட்டிவிட்டு மாயமான அருணை ,தேடும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.