போதையில் 5 பேர் சேர்ந்து இளைஞனை பாலியல் வன்கொடுமை.!

இந்தியாவில் மும்பையில் 36 வயது மதிக்கத்தக்க ஒருவர் 5 காம கொடூர ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

மும்பை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அலுவலகத்தில் பணியை முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார், அப்போது அவர் புகைப்பிடிப்பதற்கு மரத்திற்கு அடியில் நின்றுள்ளார். அந்த இடமானது ஆள் நடமாட்டமே இல்லாத பகுதி, இந்த நிலையில் திடிரென்று 5 இளைஞர்கள் வந்து, நின்று கொண்டிருந்தவரை மறைவான இடத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.

அதன் பின்னர், அந்த இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் அவர்களிடம் இருந்து தப்பித்து சாலை ஓரம் ஓடி வந்திருக்கிறார்.

அந்த வழியாக சென்றவர்களின் உதவியுடன், அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் ஆசனவாய் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 25-30 வயது மதிக்கத்தக்க 5 பேர் தன்னை இயற்கைக்கு முரணான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், அவர்கள் போதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.