கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி எனும் கன்னட படம் மூலம் 17 வயதில் நடிகையாக அறிமுகமானவர் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே.
ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த வாட்ச்மேன் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். மேலும், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி வித்தியாசமான வேடத்தில் நடித்த கோமாளி படத்தில் காஜல் அகர்வாலை தவிர்த்து ஹீரோவின் பள்ளிப்பருவ காதலியாக சம்யுக்தா ஹெக்டே நடித்து தமிழ் இளைஞர்களின் மனதை கவர்ந்தார்.
மேலும், அவர் எனும் தீயல் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அதிகம் நபர்களால் பின்தொடரப்படும் கன்னட நடிகை என்றால் அது சம்யுக்தா தான். சுமார் 9 லட்சம்பேர் இவரை பின்தொடர்கிறார்கள். படப்பிடிப்புகளில் இல்லாத சமயத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள இவர். அப்படி சுற்றுலா செல்லும் இடங்களில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கண்களை குளிர வைப்பார்.
எப்போதும், ரசிகர்களின் கண்களை குளிர வைத்து வந்த இவர், இப்பொது அவர்களை சூடாக்கி விட்டார். கருப்பு நிற பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட செம்ம ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.