கடந்த இரண்டு சீசன்களை போலவே இந்த சீசனிலும் 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டு யார் இந்த பணத்துடன் இப்போதே வெளியேற போகிறீர்கள் என்று கேட்டார் பிக்பாஸ்.
ஏற்கனவே கடனை அடைக்கதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறிய கவின், இந்த வாய்ப்பை லட்டு போல பயன்படுத்திக்கொண்டார். பேமென்ட் இல்லாமல் 5 லட்சம் ரூபாய் கிடைம்போது அதனை எடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனம் என்று எண்ணிய கவின், இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்று கூறிவிட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
ஏற்கனவே, கடன் பிரச்சனையால் அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம் என நண்பர்கள் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதாக கூறினார் கவின். கவினின் தாயார் சீட்டுக்கம்பெனி மோசடி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின்படி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவினை, நிகழ்ச்சிக்குழு ஹோட்டலில் தங்கவைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்கள், விஜய் டிவி ஏற்பாடு செய்யும் பிரஸ்மீட்டில் பங்கேற்ற பின்னரே மற்ற நிகழ்ச்சிகிளில் பங்கேற்க முடியும்.
இது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோர் குறித்த தகவல் தெரிந்தால் கவின் நிச்சயம் வெளியேறிவிடுவார், நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வெளியாகிவிடும் என்பதால் கவினை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு ஹோட்டலில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.