பிக்பாஸ் வீட்டிலிருந்து சமீபத்தில் கவின் வெளியேறிய நிலையில் நேற்று முன்தினம் வரை லாஸ்லியா அதை நினைத்து கண்ணீர் விட்டு கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு நடிகை ஐஸ்வர்யா தத்தா வந்துள்ளார். அவர் நடித்த ஒரு படத்தின் போஸ்ட்டரையும் வீட்டில் வெளியிட்டனர்.
மற்ற போட்டியாளர்கள் அந்த போஸ்ட்டரை ஓபன் செய்துகொண்டிருந்தபோது, ஐஸ்வர்யா லாஸ்லியாவை பார்த்து, “லாஸ்லியா நீங்க ஓபன் பண்ணுங்க. உங்க கை ரொம்ப ராசியான கை” என கூறினார்.
அவர் அப்படி கூறியது லாஸ்லியாவுக்கே ஆச்சர்யமாக இருந்தது.