பெரமுன தலைவர்கள் தமது தேர்தல் தொடர்பிலான நிலைப்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர்கள் இதனைக் கூறியுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மலர் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தாம் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வோம் என்ற கோரிக்கையை பெரமுன கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அது தொடர்பில் தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் கலந்துரையாட வேண்டும் என ஜனாதிபதி அதற்குப் பதிலளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் கோட்டாபய ராஜபக்ஸ, எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.