ஜோர்தானில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் மீள நாடு திரும்புவதற்கான பொது மன்னிப்புக் காலம் தற்போது நடைமுறையிலிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.
செப்டெம்பர் 22ஆம் திகதியன்று நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இந்த பொது மன்னிப்புக் காலம் நவம்பர் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென்றும் பணியகம் அறிவித்துள்ளது.
தொழில் வீசாவில் சென்றவர்களின் காலஎல்லை நிறைவடைந்த போதும் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருப்பவர்கள் பொது மன்னிப்புக் காலத்தில் இலவசமாக நாடு திரும்ப முடியும்.
எனினும் சுற்றுலா வீசாவில் ஜோர்தான் சென்று அதன் முடிவடைந்த நிலையில் அங்கு வாழ்பவர்கள் அபராதம் செலுத்தியதன் பின்னரே நாட்டுக்கு வரமுடியுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சட்டவிரோதமாக ஜோர்தானில் தங்கியிருக்கும் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களை பொது மன்னிப்புக்காலத்தைப் பயன்படுத்தி நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்குமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை மக்களை கேட்டுள்ளது.