81 வயது பாட்டியை 24 வயது இளைஞன் திருமணம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது!

81 வயது மூதாட்டியை 24 வயதான இளைஞர் திருமணம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் இளைஞர்கள் கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். இதை விரும்பாத 24 வயதான அலெக்ஸாண்டர் கொன்ட்ராட்யுக் என்கிற இளைஞர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

உக்ரைன் சட்டப்படி, மனைவி மாற்றுத்திறனாளியக இருந்தால், அவரது கணவர் கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதை பயன்படுத்தியே அந்த இளைஞர் இராணுவ சேர்க்கையிலிருந்து தப்பிக்க முடிவெடுத்துள்ளார்.

இதற்காக அவர் தேர்ந்தெடுத்தது 81 வயது மூதாட்டியை. தனது கிராமத்தில் இருக்கும் தனது உறவுமுறை மூதாட்டியான 81 வயது ஸினைடா இல்லாரியோனோவ்னா-வை அலெக்ஸாண்டர் மணம் முடித்துள்ளார்.

இதனால் அந்த இளைஞரைத் தேடி இராணுவத்தில் இருந்து ஆட்கள் வந்தால், தனது மனைவி மாற்றுத்திறனாளி என்ற சான்றிதழையும், அவர்களின் திருமண சான்றிதழையும் காண்பித்துத் தப்பி கொள்கிறார் இந்த இளைஞர்.

இருப்பினும் இந்த திருமணத்திற்குப் பிறகு அந்த மூதாட்டி வீட்டுக்கு அலெக்ஸாண்டர் செல்வது இல்லை என்று கூறப்படுகிறது.