தனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும் தொடர்ந்தும் தான் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவைசெய்யும் மனப்பாங்குடன் தான் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் பொலன்னறுவை இசிப்பத்தான நலன்புரி சங்கத்தின் சனசமூக நிலையத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது .
இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் இந்தக் கருத்தை தேர்தலுக்காக சொல்லவில்லை, எனக்கூறிய ஜனாதிபதி, தேர்தல் முடிந்த பின்னரும் அதாவது பின்னரும் எனது அபிவிருத்தி செயற்பாடுகள் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பொலன்னறுவை இசிப்பத்தான விகாராதிபதி சங்கைக்குரிய உடகம தம்மானந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.