பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்கள் இல்லாமல் பலருக்கு பொழுதே விடிவதில்லை, இதன் மூலம் பல நன்மைகளும் நிகழத்தான் செய்கின்றன.
அந்தவகையில் ஒரே ஒரு பாட்டின் மூலம் பிரபலமடைந்த திருமூர்த்தி என்பவரை பற்றி பார்க்கலாம்!…
தமிழகத்தின் நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி(மாற்றுத்திறனாளி), பிறவிலேயே கண்பார்வையை இழந்தனர்.
இவரது தந்தை பெயர் திருமால், சிறுவயது முதலே இசை மீது தீரா காதல் கொண்ட இவரை, இவரது பெற்றோர் பர்கூரில் இருக்கும் மாற்றுத்திறனாளி பள்ளியில் சேர்த்துள்ளனர்.
எனினும் தன் மகனை தனியாக விட அஞ்சிக்கொண்டு, படிப்பை நிறுத்திவிட்டு மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
வீட்டிலேயே இருந்த திருமூர்த்தி பொழுதுபோக்காக, இசையில் தன்னை தானே வளர்த்துக் கொண்டார், கையில் கிடைக்கும் பொருட்களை இசைக்கருவியாக மாற்றுவதில் வல்லவர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இவரது தாயார் இறந்துவிட, கிராம மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்துள்ளார்.
200க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் சொந்தமாக 10 பாடல்களை எழுதியுள்ள திருமூர்த்தி, சமீபத்தில் பாடிய “கண்ணான கண்ணே” பாடல் லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டது.
இதை அந்த கிராமத்தை சேர்ந்த அருண்மூர்த்தி என்பவர் வீடியோவாக எடுத்து வெளியிட, வைரலானது, இவரது வசீகரிக்கும் குரலால் ஈர்க்கப்பட்ட பல பிரபலங்களில் டி.இமானும் ஒருவர்.
இவரை பற்றிய தகவல்களை கிடைக்கப்பெற்ற நிலையில், தன் படத்தில் விரைவில் பாடவிருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் வெளியிட்டுள்ளார்.