பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தர்ஷன் சந்தித்த நபர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 99வது நாளை எட்டியுள்ள நிலையில், பிக்பாஸில் போட்டியில் முக்கிய போட்டியாளரக இருந்த தர்ஷன் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார், தர்ஷன் பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர் திடீரெனெ பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், சாண்டி, ஷெரின் மற்றும் லொஸ்லியா கைப்பற்றப்பட்டுள்ளனர். இதனை அடுத்து முகின், சாண்டி, ஷெரின் மற்றும் லொஸ்லியா இறுதிப்போட்டிக்கு செல்ல உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷன் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எடுக்கப்பட்டதா அல்லது அதற்கு முன்னதாக எடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.