கடற்படையின் முன்னாள் பேச்சாளர், கொமாடோர் டி.கே.பி திசாநாயக்க ரியர் அட்மிரலாக தரமுயர்த்தப்படவுள்ளதாக தெரிவிகபடுகின்றது.
டி.கே.பி திசாநாயக்கவின் பதவி உயர்விற்கான அங்கீகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.
5 தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தசாநாயக்க, அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் குற்றமிழைத்தவர்களை பாதுகாக்கும் கலாசாரம் மீளவும் இலங்கையில் தலைதூக்குகின்றா எனும் அச்சம் பதவி உயர்வு எழுமுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.