பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர் கணிதத்தில் உலகசாதனை படைத்தர்!!

கணிதத்தில் எலிசேயர் தேற்றத்தை கண்டுபிடித்த யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர் பற்றிய விவரணம் இது:

யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் இலிசயர் 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி கல்வியை தொடரும்போது 1948ஆம் ஆண்டு அவரால் கண்டுபிடிக்கப்பட்ட இலிசயர் தேற்றம் இன்றும் உலக பல்கலைக்கழகங்களில் ஒரு பாடமாகவே காணப்படுகின்றது.

இவரது கணித மற்றும் தமிழ் தொண்டுக்காக அவுஸ்திரேலிய அரசு தனது உயர் விருதான ஓர்டர் ஒப் அவுஸ்திரேலியா என்ற விருதை 1996ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்துள்ளது.