தலைமுடி உதிர்வு, வழுக்கைப் பிரச்சனை, இளநரைமுடி, போன்ற அனைத்து வகையான கூந்தல் பிரச்சனைகளுக்கு இயற்கையில் சில அற்புதமான தீர்வுகள்:
லாவண்டர் எண்ணெய் – 5 துளிகள் விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன் 2 எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக தடவ வேண்டும். 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
பிறகு, நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் ஷாம்பூவால் தலை முடியை தேய்த்து வெது வெதுப்பான நீர் கொண்டு அலச வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் இதனை தொடர்ந்து செய்து வருவதால் உங்கள் முடி விரைவில் அடர்த்தியாகும்.
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து, அந்த நீரில் தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.