‘தளபதி 64’ படத்தின் இணைந்த நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜயின் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், ‘தளபதி 64’ பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், ‘தளபதி 64’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம் மாதத்தில் முதல் வரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வெளியாகவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இணைந்திருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. அதேபோல் இசையமைப்பாளராக அனிருத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

‘தளபதி 64’ படைத்தை லோகேஷ் இயக்கத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘தளபதி 64’ படத்தில் விஜய்சேதுபதி இணைந்திருப்பதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகின்றது.