பல பெண்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை முகத்தில் எண்ணெய் வழிவது தான். எண்ணெய் வழியும் காரணத்தினால் முகத்தின் அழகையே பாழாக்கி விடும். இதனை எப்படி சரி செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.
முகத்தை அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இதன் காரணமாக முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை குறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். முகத்தை சோப்புப் போட்டுக் கழுவி கொள்வதற்கு பதிலாக கடலைமாவு போட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.
தக்காளி சாறு எடுத்து சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால், அதனை முகத்தில் தடவி நன்றாக ஊற வைத்து பின்னர் முகத்தை கழுவினால் எண்ணைப் பசை நீங்கிவிடும். பளிச்சென இருக்கும். மேலும், முகத்தில் நன்றாக பூசி மசாஜ் செய்து சிறிது நேரத்திற்கு பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும்.
காலையில் எழுந்தவுடன் வெள்ளரிக்காயை குட்டி, குட்டியாக வெட்டி முகத்தில் தேய்த்து வர எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென இருக்கும். இது போன்ற எளிய தீர்வுகளை செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் எண்ணை பசையை சரிசெய்து பொலிவான மற்றும் எண்ணெய் பசை சருமத்தை பெற முடியும்.