ஷெரினை வெற்றி பெற செய்ய, வனிதா கையில் எடுத்த அதிரடி திட்டம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று 101வது நாளை எட்டியுள்ளது. இறுதி போட்டிக்கு முகின், சாண்டி, லொஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் இந்த சீசனியில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், இன்று கஸ்தூரி, வனிதா, சேரன் மற்றும் அபிராமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

இன்றைய முதல் பிரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரச்சனையை ஆரம்பித்துவிட்டார் வனிதா. அப்போது தர்ஷன் வெளியேறியதற்கு காரணம் ஷெரின் தான் என்று நான் சொன்னதை அப்போது யாரும் கேட்கவில்லை என்றும், இப்போதுதான் அது உண்மை என எல்லோருக்கும் தெரியவந்தது னென்று வனிதா கூறினார். உடனே நீங்கள் சொல்வதால் உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது என்று கூறி சாக்ஷி கோபத்துடன் கூறினார்.

வனிதாவால் ஷெரின் மனம் உடைந்து கண்ணீர் விட்டு அழுகிறார்.  இதனிடையே ஷெரினை வெற்றிபெற செய்ய வனிதாவின் திட்டம் தான் இது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சேரன் சீக்ரெட் ரூம்மில் அனுப்பப்பட்ட வாரத்தில் ஷெரின் வெளியேறுவதற்கு வாய்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ஷெரின் மற்றும் வனிதா இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஷெரினுக்கு அனுதாப வாக்குகள் அதிகரித்து காப்பாற்றபட்டு விட்டார் என்று சிலர் கூறினர். இதேபோன்று தற்போது தேவையில்லாத பிரச்சனையை வனிதா தூசி தட்டி விட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஷெரினுக்கு ஓட்டுக்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.