சுவையான காராமணி இனிப்பு சுண்டல்.!

தேவையான பொருட்கள்: 

வெல்லம் அல்லது கருப்பட்டி – அரை கப்
வெள்ளை காராமணி – 1 கப்
ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி
நெய் – 2 தேக்காரண்டி
தேங்காய் துருவல் – சிறிதளவு.

செய்முறை :

கருப்பட்டி அல்லது வெல்லத்தை கரைத்து வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சி கொள்ளவும்.

காராமணியை நன்றாக கழுவி சுமார் 6 மணிநேரம் ஊற வைத்த பின்னர் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

வாணலியில் நெய்யை ஊற்றி காய்ந்த பின்னர் காராமணியை அதில் சேர்த்து கிளறி காய்ச்சிய கருப்பட்டி அல்லது வெல்லப்பாகு, ஏலக்காய் தூளை சேர்த்து கிளறி கொள்ளவும்.

பின்னர், முன் தேங்காய் துருவலை அதில் தூவி இறக்கி கொள்ளவும். சத்தான காராமணி இனிப்பு சுண்டல் தயார்.!