இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆனது, இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக முதன்முறையாக இறக்கப்பட்ட ரோஹித் சர்மா எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக விளையாடி, சதம் அடித்து அசத்தினார். ரோஹித் 12 பவுண்டரி 5 சிக்ஸர்களுடன் 115 ரன்களை எடுத்திருந்த போது தொடர் மழையால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அகர்வால் 183 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 2 சிக்சருடன் 84 ரன்களுடன் களத்தில் நிற்க இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே இருவரும் அரைசதம் அடிப்பதும் இதுவே முதல் முறையாகும். அகர்வால், ரோஹித் இருவருமே முன்னாடியே அறிமுகமாகி இருந்தாலும், ரோஹித்க்கு தொடக்க ஆட்டக்காரராக இது தான் முதல் போட்டி, மயங்க் அகர்வாலுக்கு இந்தியாவில் இது தான் முதல் போட்டியாகும்.
டெஸ்டில் 2019 இல் மூன்று முறை மட்டுமே தொடக்க ஜோடி 100 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது.
254 நியூசிலாந்து
202 * இந்தியா
161 இலங்கை
டெஸ்ட்ல் தொடக்க ஜோடியாக இறங்கி முதல் போட்டியிலேயே 200-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்தவர்கள்!
சேவாக் / டிராவிட் லாகூர், 2005/06
விஜய் / தவான் , மொஹாலி, 2012/13
அகர்வால் / ரோஹித் ஷர்மா , விசாக், 2019/20 *
11 ஆண்டுகளுக்கு பிறகு:
2008 ஆம் ஆண்டில் சென்னையில் தொடக்க ஜோடி சேவாக் & ஜாஃபர் ஜோடி 213 ரன்கள் எடுத்த பிறகு டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 200+ ரன்களை எடுத்த தொடக்க ஜோடி என்ற பெருமையை ரோஹித் அகர்வால் பெற்றுள்ளனர்.