எப்பொழுதும், சோர்வு.. தூக்கம், தூக்கமாக வருகிறதா.?

ஒருசிலர் எப்போதும் சோர்வாக இருப்பது போன்று உணர்வதால், அடிக்கடி தூங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் காரணமாக பல்வேறு உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றது. சிலர் எதையுமே ஒரு ஈடுபாட்டுடன் இல்லாமல் செய்து வருவர்.

இதற்கு காரணம், உடலில் இரும்பு சத்து மிகவும் குறைவாக இருப்பது தான். ஹிமோகுளோபின் குறைவாக இருப்பதன் காரணத்தால் இவ்வாறு, உடல் பலவீனமடைகின்றது. மேலும், உடலில் உள்ள செல்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காததன் காரணத்தாலும் உடல் பலவீனமடையும்.

இந்த பிரச்சனையை சரிசெய்ய இறைச்சி, பச்சை இலை காய்கறிகள், பயறு வகைகள், நட்ஸ், நீர்ச்சத்து கொண்ட பழங்கள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். சீரான இடைவெளியில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் கொண்ட உணவு வகைகளை சாப்பிடுவதால் பகலில் சோர்வு ஏற்படாது.

காபி, டீயை தவிர்த்துவிட்டு மூலிகை டீ வகைகளை குடிப்பது அவசியம். ஆர்வமின்மை, கவனச்சிதறல் போன்றவை வைட்டமின் பி குறைபாடு காரணமாக ஏற்படும். மதுப்பழக்கத்தை கைவிட்டு விட்டு, புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் உன்ன வேண்டும். காலை உணவை கண்டிப்பாக தவிர்க்க கூடாது. வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருக்க கூடாது.