திதி என்பது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தொலைவு ஆகும். திதி பஞ்சாங்கத்தில் ஒரு முக்கிய பகுதியாகும்.
அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே தீர்க்கரேகையில் இருக்கும். இந்த இரண்டிற்கும் இடையே உள்ள தீர்க்கரேகை வித்தியாசத்தின் அடிப்படையில்தான் திதிகள் தோன்றுகின்றன.
அமாவாசை நாளையும், பூரணை(பௌர்ணமி) நாளையும் அடுத்து வரும் இரண்டாவது திதி துவிதியை ஆகும்.
அமாவாசையை அடுத்துவரும் துவிதியை சுக்கில பட்ச துவிதியை என்றும், பூரணையை(பௌர்ணமி) அடுத்த துவிதியை கிருஷ்ண பட்ச துவிதியை என்றும் அழைக்கின்றனர்.
இதுவரை நாம் ஒவ்வொரு திதியிலும் என்னென்ன காரியங்கள் செய்யலாம்? என்பதை பற்றி தெரிந்து கொண்டோம்.
இனி வரும் நாட்களில் நாம் பிறந்த திதிகளுக்கு ஏற்ப அவரவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
துவிதியை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் :
எதிலும் நேர்மையுடன் இருக்கக்கூடியவர்கள்.
புகழ் உடையவர்கள்.
உண்மையை பேசக்கூடியவர்கள்.
சொன்ன சொல்லைத் தவறாதவர்கள்.
முயற்சிகளால் முன்னேறக்கூடியவர்கள்.
பொருள் தேடும் திறமை உடையவர்கள்.
பொய்யை விரும்பாதவர்கள்.
புதிய உபகரணங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்கள்.