ஜனாதிபதிகள், முன்னாள் தலைவர்கள், அரச குடும்பங்கள் என எண்பதிற்கும் மேற்பட்ட தலைவர்கள், நேற்று பிரான்சின் ஜனாதிபதி மாளிகையான எலிசே மாளிகையில், சாவடைந்த முன்னாள் ஜனாதிபதி ஜக் சிராக் அவர்களிற்கு இறுதி வணக்கம் செலுத்தி உள்ளார்கள்.
இவர்களுள் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
ரஸ்ய அதிபர், இத்தாலி ஜனாதிபதி, கொங்கோ ஜனாதிபதி, லெபனானின் பிரதமர், ஹங்கேரி பிரதமர், ஜோர்தான் மன்னர், கட்டார் மன்னர், உட்படப் பல தலைவர்கள், மற்றும் பல முன்னாள் தலைவர்கள், பரிசின் சன்-சுப்லிஸ் தேவாலயத்தில், முன்னாள் ஜனாதிபதி ஜக் சிராக்கிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.