சென்னை: மாமல்லபுரம் வரும்போது பேனர்களை வைக்க தமிழக அரசை அனுமதிக்க வேண்டாம் என கமல்ஹாசன் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கூறியிருப்பது: பேனர் விழுந்து பலியான சுபயின் மரணத்தால் தமிழகமும் தமிழர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதிலிருந்து மீள முடியவில்லை. இந்நிலையில் சீன அதிபருடன் பேச நீங்கள் (பிரதமர் மோடி) மாமல்லபுரம் வரும்போது உங்கள் பேனர்களை வைக்க தமிழக அரசு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளது.
உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, பேனர்களை வைக்க நீங்கள் தடை விதிக்க வேண்டும். அதுவே தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் செயலாக அமையும். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.