இந்தியாவின் இமயமலைப் பகுதியில் மாயமான ரொறன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரை, தேடுவதற்கான தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை இந்திய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
ரொறன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரும் ஆராய்சியாளருமான பீட்டர் விட்டெக் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இமயமலைப் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட பனிச்சரிவில், ஐந்து பேர் தப்பித்துக் கொண்டதாகவும், பீட்டரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,700 மீட்டர் உயரமான அந்த மலை முகட்டுப் பகுதியிலேயே, இவர் காணமல் போயுள்ளதாகவும், அங்கே நிலவும் சாதகமற்ற வானிலை காரணமாக தேடுதல்களும் தாமதமாவதாகவும் கூறப்படுகிறது.