உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரைச் சேர்ந்த ஜமாலுதீன் என்ற இளைஞருக்கு .உடல் உறுப்புகள் எல்லாம் தலைகீழாகப் இருந்துள்ளது. அவரது இதயம் வலது பக்கத்திலும், கல்லீரல், பித்தப்பை எல்லாம் இதயம் இருக்க வேண்டிய இடத்திலும் அமைந்துள்ளது.
இதுவரை அவர் எந்த சிக்கலும் இல்லாமல் வாழ்ந்துவிட்டார். ஆனால், அவருக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது என்பது சமீபத்தில் தான் தெரிய வந்துள்ளது. அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு மருத்துவரை சந்திக்க சென்றுள்ளார்.
அப்பொழுது அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் இவரின் உடல் உறுப்புகளின் நிலையை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். அதன் பின்னர் அவரின் பித்தப்பையில் கற்கள் இருப்பதால் தான் இவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
ஆனால், இவரது உடலில் அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினம் என்றும், அப்படி வேண்டுமானால் முப்பரிமாண சிகிச்சை இயந்திரங்கள் தேவை படும் என்றும் கூறியுள்ளனர்.