தமிழகத்தில் நாமக்கல் அருகே மனைவி மற்றும் ஒன்றரை வயது மகனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டதில் மாணிக்கவேலூரை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சுரேஷ் அந்த பகுதியில் வசித்து வந்த கௌரி என்பவரை காதலித்து கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு புகழ்வினை என்னும் ஒன்றரை வயது மகனும் இருந்திருக்கிறான். இந்த நிலையில், மனைவி கௌரியின் நடத்தையில் சந்தேகமடைந்த சுரேஷ் கடந்த ஜூன் 9ம் தேதி மனைவி, மகனை அருகே உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, அவரை மீட்ட அப்பகுதியினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மனைவி, மகனை கொன்ற வழக்கில் சுரேஷை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த சுரேஷ் மனைவி, மகனை கொலை செய்த தோட்டத்திற்கு சென்று மின்சாரத்தை உடலில் பாய்ச்சி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சுரேஷின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். மனைவி, மகனை கொன்ற விரக்தியில் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறேதும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.