உலக விலங்கு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4-ல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளின் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
* 1777 – அமெரிக்கப் புரட்சி: பிலடெல்பியாவின் ஜெர்மண்டவுன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஜார்ஜ் வாஷிங்டனின் படைகளை சேர் வில்லியம் ரோவின் பிரித்தானியப் படைகள் தோற்கடித்தன. * 1824 – மெக்சிகோ குடியரசு ஆகியது. * 1830 – பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது. * 1853 – கிரிமியப் போர்: ஒட்டோமான் பேரரசு ரஷ்யா மீது போரை அறிவித்தது. * 1883 – ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. * 1910 – போர்த்துக்கல் குடியரசு அறிவிக்கப்பட்டது. இரண்டாம் மனுவேல் மன்னன் ஐக்கிய இராச்சியத்துக்கு தப்பினான். * 1918 – நியூ ஜேர்சியில் ஷெல் கம்பனியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
* 1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா சொலமன் தீவுகளைக் கைப்பற்றியது. * 1957 – பண்டா – செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக கண்டிக்கு நடைப்பயணம் நடத்தப்பட்டது. * 1957 – முதலாவது செயற்கைச் செய்மதி ஸ்புட்னிக் 1 பூமியைச் சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது. * 1958 – பிரான்சின் ஐந்தாவது குடியரசு அமைக்கப்பட்டது. * 1959 – லூனா 3 விண்ணுக்கு ஏவப்பட்டது.