கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் யார் தெரியுமா ??

கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி தேர்தலில் மிக அதிக வாக்குகள் பெற்று அவர் வெற்றியடைந்தார்.

மொத்தம் 1054 வாக்குகள் பதிவாகின அதில்  பின்னிக்கு 943 வாக்குகளும் எம்.எம். ஹரிஷுக்கு 111 வாக்குகளும் கிடைத்தன. பின்னி இதற்கு முன்பு 2007 முதல் 2012 வரை கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1983 நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியை இந்திய அணி வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் பின்னி.  அந்த போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பின்னி பெற்றார். இந்திய அணிக்காக 27 டெஸ்டுகளிலும் 72 ஒருநாள் ஆட்டங்களிலும் அவர் விளையாடி உள்ளார்.