நான்கு விருதுகளை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ராட்சசன்..!!

இயக்குனர் ராம்குமார் முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகம் ஆகினார். முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து படம் எடுத்த நிலையில்., தனது இரண்டாவது படமான ராட்சசன் திரைப்படத்திலும் விஷ்ணு விஷாலுடன் கரம்கோர்த்தார்.

இந்த படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷாலும்., கதாநாயகியாக அமலாபாலும்., திரையுலக நட்சத்திரங்களான முனிஷ் காந்த்., காளி வெங்கட்., ராதா ரவி., வினோதினி மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படமானது வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும்., இத்திரைப்படத்தின் கிரைம் மற்றும் திரில்லர் தமிழ் மக்கள் மட்டுமல்லாது உலகளாவிய ரசிகர்களையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தின் கதையம்சமும் பார்வையாளர்களுக்கு பெரும் பயத்திற்கு மத்தியில்., விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது. இந்த திரைப்படம் இந்தியா திரைப்பட விழாக்கள் மட்டுமல்லாது., உலகளவில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் பங்கேற்றது

தற்போது அமெரிக்க நாட்டில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற ராட்சசன் திரைப்படமானது சிறந்த திரைப்படம்., சிறந்த நடிகர்., சிறந்த திரில்லர் மற்றும் சிறந்த பின்னணி இசை போன்ற நான்கு விருதுகளை பெற்றுள்ளது.