சுவையான இட்லி பொடி செய்வது எப்படி..!!

தேவைப்படும் பொருட்கள் :

தேங்காய் துருவியது – 1 ஸ்பூன்
அரிசி – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தே. அளவு
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
சிவப்பு மிளகாய் – 20
பெருங்காயம் – தே.அளவு
வெள்ளை எள் – 1 ஸ்பூன்

செய்யும் முறை :

கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், பெருங்காயக் கட்டி, வெள்ளை எள், தேங்காய்த் துருவல், அரிசி அனைத்தும் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

அதைக் காற்றில் நன்கு ஆறவைத்து சூடாற வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் கொஞ்சம் மொரமொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போது உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

இட்லி பொடி ரெடி.! மொருமொரு தோசைக்கு, மல்லிகை பூ இட்லிக்குப் பொருத்தமான இட்லிப் பொடி தயார்.

இதைக் காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.